காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளலாமென்றெண்ணி
மாற்றான் தோட்டத்திலிருந்து கொள்ளையடிக்கத் துணிந்தேன்..
எண்ணித் துனிக கருமம் என்பதால்
பல முறை எண்ணித்தான் துனிந்தேன் ‘சுடப் போகும்’ தண்ணியை விற்றிட..
களவும் கற்று மறக்கலாமென்ற ஒரே காரணத்தால்
மள மளவென்று தோண்டினேன் வறண்ட நிலத்தினை!
வினை விதைத்தது நானேயென்பதால் புது கிணத்துக்கு கிடைத்த நன்றியே நான் அறுத்த
வினையாக எண்ணி மாற்றானின் வீட்டிலிருந்து விடை பெற்றேன் முறைப்போடு!
வினையால் வினை செய்தவன்…,
…
தன் வினை,
………
………
………
தன்னை ………
………
………
………
………
………,சுட்டதா?
என்பதை,
‘முறைப்போடு’ முத்திரையாய் முடித்திருக்கிறாய், கவிச்சகோதரனே!
வலைப்பூவில் ஏற்றும் படைப்புக்களுக்கு மத்தியில்,
ஏன் இந்த நீண்ட இடைவெளி?
அடிக்கடி முத்திரை பதிக்க எண்ணமில்லையா,
இல்லையென்றால் நேரம் ஒதுக்க முடியவில்லையா?
நிச்சயம் கருத்தூற்றிற்கு பஞ்சமில்லை என்பது
உனது எழுத்துக்களை (ஆங்கிலமும் சேர்த்து)
தொடர்ந்து வாசிப்போர்க்கு நிச்சயம் தெரிந்திருக்கும்!
காரணம் அறிய ஆவலாய்…