“ப்லாக்” ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆன பிறகு தமிழில் எழுதும் முயற்சி இது. முயற்சி திருவினையாகும் என்பார்கள். என் முயற்சியோ இது வரை என் கைகளுக்கு கசப்பாகவும், கண்களுக்கு இனிமையகவும் இருந்து கொண்டிருக்கிறது…எனினும், திருவினையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையே இந்த முயற்சியை நான் தளற விடாமல் இருக்க உந்துதலாக இருக்கும்.
பெரிதாக எதுவும் தமிழில் எழுதி சாதிக்காவிட்டாலும், சிறிதாக அவ்வப்பொழுதெழுதி, சிற்றின்பம் பெற்றுக்கொள்ளலாம் என சிந்தித்து, இத்தோடு முதல் முயற்சிக்கு முழுமனதோடு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
(பிழை ஏதும் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் – Typoக்களை சரி செய்ய பயன் படுத்திக் கொள்வேன் உங்கள் கருத்துக்கள் மூலம்…)